நிதி அமைச்சகம்

60 ஐஆர்எஸ் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு

प्रविष्टि तिथि: 16 DEC 2020 6:27PM by PIB Chennai

ஐஆர்எஸ் அதிகாரிகள் 60 பேர், இன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.

தேசிய தலைநகர் மண்டலத்தில் அமைந்துள்ள பரிதாபாத்தில் ஐஆர்எஸ் அதிகாரிகளின் 70வது பிரிவினர் பயிற்சி பெற்று வந்தனர்.

இவர்கள் இன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். மொத்தம் உள்ள 60 அதிகாரிகளில் 15 பேர் பெண்கள். பயிற்சி நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனின் தகவல் வாசிக்கப்பட்டது.  இணையமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே ஆகியோரின் வீடியோ தகவல்களும் இளம் அதிகாரிகளுக்கு ஊக்குவிப்பாக இருந்தன.

இந்த பயிற்சி நிறைவுவிழா நிகழ்ச்சிக்கு மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கவாரிய தலைவர் திரு எம் அஜித் குமார் தலைமை தாங்கினார். நாட்டின் கட்டமைப்பு வளர்ச்சியில்  தங்கள் உற்சாக பங்களிப்பை அளிக்க வேண்டும் என இளம் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் மிகப் பெரிய வரி சீர்திருத்தமான ஜிஎஸ்டியை நிர்வகிக்கும் பணியில் இந்த இளம் அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681158

**********************


(रिलीज़ आईडी: 1681268) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी