ஜல்சக்தி அமைச்சகம்

தேசிய நீர் வள இயல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆய்வு

Posted On: 16 DEC 2020 6:29PM by PIB Chennai

உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் வள இயல் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜல்சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் செகாவத் மற்றும் இணை அமைச்சர் திரு ரத்தன்லால் கட்டாரியா ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

செயல்படுத்தும் முகமைகளுக்கு 100 சதவீத நிதி உதவியுடன் 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய அரசு திட்டமான தேசிய நீர் வள இயல் திட்டம், ரூ 3680 கோடி மதிப்பீட்டில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

மேற்கண்ட தொகை 8 வருடங்களுக்கு செலவிடப்படும். நீர்வள தகவல்களின் அளவு, நம்பகத்தன்மை மற்றும் அணுகலை  மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டிலுள்ள நீர்வள மேலாண்மை நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துவதும் இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1681164

**********************


(Release ID: 1681264) Visitor Counter : 286


Read this release in: English , Urdu , Hindi , Telugu