புவி அறிவியல் அமைச்சகம்

பருவகால வானிலை பற்றிய 4 நாள் இணைய கருத்தரங்கு (டிராப்மெட் -2020):இந்திய வானிலை ஆய்வு சங்கம் (ஐ.எம்.எஸ்) மற்றும் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்துகிறது

Posted On: 15 DEC 2020 1:11PM by PIB Chennai

பருவகால வானிலை பற்றிய 4 நாள் இணைய கருத்தரங்கு (டிராப்மெட் -2020):இந்திய வானிலை ஆய்வு சங்கம் (ஐ.எம்.எஸ்) மற்றும் வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் நடத்துகிறது.

மலை பிரதேசங்களில் வானிலை சேவைகள் என்ற தலைப்பின் கீழ் பருவகால வானிலை பற்றி 4 நாள் இணைய கருத்தரங்கை டிசம்பர் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை, இந்திய வானிலை சங்கம் (ஐஎம்எஸ்), ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்துகிறது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள 450 பேர் பதிவு செய்துள்ளனர். 315 ஆய்வு கட்டுரைகள் இந்த கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும், 12 விரிவுரைகள், பிரபல நிபுணர்கள் 13 பேரின் உரைகள், 2 நினைவு சொற்பொழிவுகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உலக வானிலை அமைப்பின் துணை தலைமை செயலாளரும் இதில் சிறப்புரையாற்றுகிறார்.

தொடக்க நிகழ்ச்சியில் மத்திய புவி அறிவியியல் அமைச்சகத்தின் செயலர் டாக்டர் எம்.என்.ராஜீவன் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார்.

மலைப் பிரதேசங்களில் வானிலை முக்கியத்துவம் மற்றும் பருவநிலை சேவைகள், இமயமலை பகுதி குறித்து பல நிபுணர்கள் இந்த கருத்தரங்கில் விவரித்தனர்.

மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையான வானிலை சமயத்தில் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க, வானிலை மையத்தின் சேவைகள் மேம்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வடகிழக்கு கவுன்சில் செயலாளர்  திரு எம்.கே. சலாய் வலியுறுத்தினார்.

மேற்கு இமயமலைப் பகுதியில், டாப்ளர் வானிலை ரேடார், தானியங்கி வானிலை மையம், ஹிமான்ஸ் வானிலை மையம் ஏற்படுத்தப்பட்டது உட்பட இந்திய வானிலை மையம் மற்றும் புவி அறிவியல் அமைச்சகம் மேற்கொண்ட பல நடவடிக்கைகளை அதன் செயலாளர் டாக்டர் ராஜீவன் எடுத்து கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680745


(Release ID: 1680787) Visitor Counter : 238


Read this release in: English , Urdu , Hindi , Bengali