அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் அறிவியல் வரலாறு, வேளாண் தொழில்நுட்பம், சுத்தமான காற்று, எரிசக்தி, தண்ணீர், பல்லுயிர், அறிவியல் செயல் திறன்

Posted On: 15 DEC 2020 1:07PM by PIB Chennai

‘தற்சார்பு இந்தியா மற்றும் உலக நன்மைக்கு அறிவியல்' என்ற கருப்பொருளில் செயல்படவிருக்கும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020,  இந்தியாவின் அறிவியல் வரலாறு, தத்துவம் மற்றும் அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், சுகாதாரமான காற்று, எரிசக்தி, தண்ணீர், கழிவு மற்றும் துப்புரவு, பல்லுயிர் மற்றும் அறிவியல் செயல் திறன் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் என்று ஆறாவது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

“கலாச்சாரத்துடன் தொடர்புடைய தற்சார்பு என்பது தன்னம்பிக்கை, சுயமரியாதை, சுயகட்டுப்பாடு ஆகிய 3 தூண்களால் வடிவமைக்கப்பட்டது. இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவைப் போன்ற நிகழ்ச்சிகள் இந்த கலாச்சார அம்சங்களை வலுவாக எடுத்துரைக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் நிறுவனமாக இயங்கும் நவி மும்பையில் உள்ள இந்திய புவி காந்தவியல் கழகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பற்றிய கூடுதல் தகவல்களுக்கு http://www.scienceindiafest.org/  என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680743

 

******



(Release ID: 1680781) Visitor Counter : 168