புவி அறிவியல் அமைச்சகம்

புரெவி புயல் குறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை

Posted On: 12 DEC 2020 5:52PM by PIB Chennai

கடந்த நவம்பர் 30 முதல் டிசம்பர் 5-ஆம் தேதி வரை வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் குறித்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு வெளியிட்டுள்ளது.

நவம்பர் 30-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்தம், 30-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தமாக வலுவடைந்தது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தமாக தென்கிழக்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்தம், மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 1-ஆம் தேதி மாலை தென்மேற்கு வங்கக் கடலில் புரெவி புயலாக உருவானது. மேலும் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து டிசம்பர் 2-ஆம் தேதி இலங்கை கடற்கரை பகுதியை கடந்தது. இலங்கையின் வடக்கு பகுதிகளில் நகர்ந்த இந்த புயல் டிசம்பர் 3-ஆம் தேதி பாம்பனில் நிலைகொண்டிருந்தது.

 தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இந்த புயல் வலுவிழந்தது. மன்னார் வளைகுடாவில் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டிய கடற் பகுதிகளில் சுமார் 18 மணி நேரம் நிலைகொண்டு, அதன் பிறகு 5-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தமாக வலுவிழந்தது. இதன் காரணமாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிக கனத்த மழை பெய்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பல்வேறு தொழில்நுட்பங்களின் வாயிலாக குறைந்த காற்றழுத்தத்தின் நகர்வு, அது கரையை கடக்கும் இடம், புயலின் தீவிரம் ஆகியவை கணிக்கப்பட்டு, இது குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை முகமைகள் அச்சு மற்றும் காட்சி ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

விரிவான அறிக்கையை இந்த மின் முகவரிகளில் காணலாம்

https://mausam.imd.gov.in/imd_latest/contents/cyclone.php

http://www.rsmcnewdelhi.imd.gov.in/images/pdf/publications/preliminary-report/burevi.pdf

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680243

-----



(Release ID: 1680299) Visitor Counter : 135


Read this release in: Manipuri , English , Urdu , Hindi