தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
2ம் நாள் இந்திய செல்போன் தொழில்துறையினர் மாநாடு : நீடித்த பாதுகாப்பான தொழில்நுட்பம், 5 ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத்துக்கான நவீன கருவிகள் குறித்து ஆலோசனை
Posted On:
09 DEC 2020 8:27PM by PIB Chennai
2ம் நாள் இந்திய செல்போன் தொழில்துறையினர் மாநாடு இன்று நடந்தது. இதில் நீடித்த பாதுகாப்பான தொழில்நுட்பம், 5 ஜி, செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்காலத்துக்கான நவீன கருவிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டன.
இந்திய செல்போன் தொழில்துறையினர் மாநாட்டின் 2ம் நாளான இன்று, "நிலையான மதிப்பை உருவாக்க தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை அளித்தல் " என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடந்தது. அதன்பின் 5ஜி பயன்பாடு, செல்போன் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம், அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவு, நிலையான வேலைவாய்ப்புக்கான புதிய திறன்கள், எதிர்காலத்துக்கான நவீன கருவிகள் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.
மீடியா டெக் நிறுவனத்துடன் இணைந்து 5 ஜி ஒழுங்குமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
யுஎஸ்ஐபிசி நிறுவனத்துடன், இணைந்து சரியான இருப்புத் தொகையை கண்டறிதல் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
2ம் நாள் மாநாட்டில், சர்வதேச தொழில்துறையைச் சேர்ந்த நிபுணர்கள், டிஜிட்டல் மாற்றம், வளர்ந்து வரும் அதிவேக தொழில்நுட்பங்கள், இணைய பாதுகாப்பு, எதிர்கால தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.
இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் டாக்டர் பி.டி வகேலா உட்பட பலர், இந்த 2ம் நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679525
------
(Release ID: 1679555)
Visitor Counter : 129