அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
இந்தியா, போர்ச்சுகல் இணைந்து பணிபுரிவதற்கான துறைகள் குறித்து ஆலோசனை
Posted On:
09 DEC 2020 6:41PM by PIB Chennai
தண்ணீர், சுகாதாரம், வேளாண் தொழில்நுட்பம், கழிவு மேலாண்மை, தூய்மையான தொழில்நுட்பம் சார்ந்த பருவநிலை தீர்வுகள், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும், போர்ச்சுகலும் இணைந்து பணிபுரிவது குறித்து இரு நாடுகளின் நிபுணர்கள் இன்று ஆலோசித்தனர்.
இந்தியா மற்றும் போர்ச்சுகலின் அரசு, கல்வி மற்றும் தொழில் துறையினர் இணைந்து நடத்திய இந்த ஆலோசனையானது, தகவல் தொழில் நுட்பத்துறையும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய தொழில்நுட்ப மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா, அறிவியல், தொழில்நுட்பம், புதுமைகள், தொழில்கள் மற்றும் சந்தைகளில் இணைந்து பணிபுரிய இந்தியாவும், போர்ச்சுகலும் மிகவும் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679458
------
(Release ID: 1679523)
Visitor Counter : 260