புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தில்லி காவல் துறை அலுவலகப் பெண் பணியாளர்களுக்கு காதி பட்டுப் புடவைகள்
Posted On:
09 DEC 2020 4:59PM by PIB Chennai
பல்வேறு அரசு அலுவலகங்களில் காதிப் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தில்லி காவல் துறையின் பெண் பணியாளர்களுக்கு காதி பட்டுப் புடவைகள் வழங்கப்படவிருக்கின்றன.
தில்லி காவல் துறை, ரூ. 25 லட்சம் மதிப்பிலான 836 காதி பட்டுப் புடவைகள் வேண்டுமென்று காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்திடம் கோரியுள்ளது. இவை இரண்டு மாதங்களுக்குள் காவல்துறையினருக்கு வழங்கப்படும்.
இது குறித்து கருத்து தெரிவித்த காதி, கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, இளைஞர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு அரசு அமைப்புகளும் காதிப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தாம் வரவேற்பதாகக் கூறினார். இதன் மூலம் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் காதி கலைஞர்களுக்கும் ஊக்கமளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679380
-------
(Release ID: 1679439)
Visitor Counter : 148