சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் & தேசிய பட்டியல் வகுப்பினர் நிதி மேம்பாட்டு கழகம் - பஞ்சாப் நேஷனல் வங்கி : புரிந்துணர்வு உடன்படிக்கை

प्रविष्टि तिथि: 08 DEC 2020 4:42PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின்கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்டோர் அடங்கிய தனிநபர் பயனாளிகளும், சுய உதவிக் குழுக்களும் பயனடையும் வகையில் செயல்படும் விஸ்வாஸ் திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் நோக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டு கழகமும் (என்பிசிஎஃப்டிசி)தேசிய பட்டியல் இனத்தவர் நிதி மேம்பாட்டு கழகமும் (என்எஸ்எஃப்டிசி) பஞ்சாப் நேஷனல் வங்கியுடன்  இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

நாடெங்கிலும் உள்ள தொழில்முனைவோரும், சுய உதவிக் குழுக்களும்  இந்தத் திட்டத்தினால் பயனடைவார்கள். இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் ஓபிசி/எஸ்.சி சுய உதவி குழுக்கள் ரூபாய் 4 லட்சம் வரையும்ஓபிசி/எஸ்.சி தனி நபர்கள் ரூபாய் 2 லட்சம் வரையும் கடன்கள் பெறலாம். கடன் பெறுவோருக்கு 5 சதவீத வட்டி மானியத் தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

 

இந்த உடன்படிக்கையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின்  பொதுமேலாளர் திரு அருண் குமார் ஷர்மா, தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட பொது மேலாளர் திருமதி அனுபமா சூத், தேசிய எஸ்.சி பிரிவினர் நிதி மேம்பாட்டு கழகத்தின் துணைப் பொது மேலாளர் திரு அமித் பாட்டியா ஆகியோர் இந்த கழகங்களின் மேலாண் இயக்குநர் திரு கே நாராயண் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1679108

**********************


(रिलीज़ आईडी: 1679128) आगंतुक पटल : 233
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi