எரிசக்தி அமைச்சகம்

நர்மதா நிலப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்துக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 07 DEC 2020 3:59PM by PIB Chennai

நர்மதா நிலப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த, என்டிபிசி நிறுவனம், போபாலில் உள்ள இந்திய வனமேலாண்மை மையத்துடன் புரிந்துணைர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இத்திட்டம் என்டிபிசி நிறுவனத்தின் நிதியுதவியுடனும், சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பின் நிதியுதவியுடனும் மேற்கொள்ளப்படுகிறது.  

இந்த 4 ஆண்டுத் திட்டம், மத்தியப் பிரதேசத்தின் கர்கான் மாவட்டம், நர்மதை ஆற்றின் கிளை நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில், ஓம்கரேஸ்வர், மகேஸ்வர் அணைகளுக்கு இடையே அமல்படுத்தப்படவுள்ளது.

ஐஐஎப்எம்,  போபால் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் தன்னாட்சி மையம்இந்த மையம் என்டிபிசி நிதியுதவியுடன், உலகளாவிய பசுமை வளர்ச்சி மையத்துடன் (ஜிஜிஜிஐஇணைந்து இத்திட்டத்தை அமல்படுத்துகிறது. சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பின் நிதியுதவியைப் பெற்று ஜிஜிஜிஐ இத்திட்டத்தை அமல்படுத்துகிறது.

இத்திட்டம் மூலம் நர்மதை ஆற்றின் கிளை நதிகளில் நீரின் அளவு மற்றும் தரம்  மேம்படும். இத்திட்டம் மூலம் இந்தூர் நகரம் அதிகப் பலன் பெறும். இந்தூர் நகரின் தேவைக்கான 60 சதவீத தண்ணீர் நர்மதா ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இத்திட்டம் குறித்து என்டிபிசி நிர்வாக இயக்குனர் திரு சவுத்திரி கூறுகையில், ‘‘என்டிபிசி நிறுவனம், தனது சமூகப் பொறுப்பு நடவடிக்கைகள் மூலம் நாட்டின் வளர்ச்சி, சமூக மேம்பாடு, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வளர்க்கக் கடமைப்பட்டுள்ளது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678820

*****(Release ID: 1678870) Visitor Counter : 189