உள்துறை அமைச்சகம்
பேரிடர், பொதுசுகாதார சவால்களை எதிர்கொள்வதற்காக தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை : மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்தியானந்த் ராய்
Posted On:
04 DEC 2020 6:21PM by PIB Chennai
நீடித்த வளர்ச்சி இலக்குக்கான நான்காவது தெற்காசிய பேரவையின் பின்னணியில், ஆசியா மற்றும் பசிபிக்குக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார, சமூக ஆணையம், பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வதற்கான சிறப்புக் கூட்டத்தை இன்று நடத்தியது.
பேரிடர் மற்றும் பொது சுகாதார ஆபத்து நிர்வாகத்தில், அமைப்பு சார்ந்து அணுகலை செயல்படுத்துவதில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவது இந்தக் கூட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் பங்கேற்றார்.
கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், வெள்ளப்பெருக்கு, புயல், வெப்ப அலைகள், குளிர் அலைகள், நிலச்சரிவு, வறட்சி போன்ற கடும் பருவநிலை சவால்களுடன் கொவிட்-19 போன்ற சுகாதார சவால்களையும், தெற்காசிய நாடுகள் சந்தித்து வருகின்றன என்றார்.
இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக நாடுகளுக்கிடையே ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1678353
------
(Release ID: 1678430)
Visitor Counter : 204