அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஐந்து கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன

Posted On: 02 DEC 2020 5:10PM by PIB Chennai

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, 2020 டிசம்பர் 22-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 25 வரை மெய்நிகர் தளத்தில் நடைபெறும். காணொலி மூலம் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழா இதுவாகும். 

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-வின் முன்னோட்டமாக பல்வேறு  நிகழ்ச்சிகளை அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழுவின் பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

இந்த வருடத்தின் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக விக்யாநிகா என்னும் சர்வதேச அறிவியல் இலக்கிய திருவிழா நடைபெற இருக்கிறது.

மேலும், 5 கின்னஸ் சாதனை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடத்தப்படவிருக்கின்றன.

தற்சார்பு இந்தியா மற்றும் சர்வதேச நலனுக்கான அறிவியல் என்பதே இந்த வருட திருவிழாவின் மையக்கருவாகும்.

 

2020 டிசம்பர் 1 அன்று, இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை நடத்தும் அமைப்பான அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி படிப்புகள் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-தேசிய அறிவியல் தொலைதொடர்பு மற்றும் தகவல் வளங்கள் நிறுவனத்துடன் இணைந்து முன்னோட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677690

**********************


(Release ID: 1677763)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi