நிதி அமைச்சகம்
மேகாலயாவில் மின் விநியோகத்தை சீரமைக்க ஆசிய வங்கியிடமிருந்து 132.8 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு இந்தியா கையெழுத்து
Posted On:
01 DEC 2020 3:20PM by PIB Chennai
மேகாலயா மாநிலத்தில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் தரத்தை மேம்படுத்தவும், அவற்றை நவீன மயமாக்கி வலுப்படுத்தவும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் 132.8 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு இன்று கையெழுத்திட்டுள்ளது.
மேகாலயா மின்சார விநியோகத் துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கான இந்த ஒப்பந்தத்தில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் (நிதி வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி) டாக்டர் சி எஸ் மொகாபாத்ரா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் இந்தியா பிரிவுக்கான இயக்குநர் திரு டகேயோ கொனிஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் மொகாபாத்ரா, இந்தத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் என்ற மேகாலயா மாநில அரசின் முயற்சிக்கு ஆதரவளிப்பதுடன் மின்விநியோகத்தை சீர்படுத்துவதன் வாயிலாக வணிக ரீதியாக மாநிலத்திற்கு ஏற்படும் நஷ்டத்தையும் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677351
******
(Release ID: 1677394)
Visitor Counter : 154