அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

வாழையில் வேர் நோய் தொற்றுக்கான காரணம் கண்டுபிடிப்பு

Posted On: 29 NOV 2020 5:50PM by PIB Chennai

வாழையில் பனாமா நோய் எனும் வேர் தொற்று நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் தடுப்பு வாழைகளை  உருவாக்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

உலகளவில் வாழை உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. வாழை வேர்களில் ஏற்படும் பூஞ்சை நோயால் வாழை உற்பத்தி அதிகம் பாதிக்கப்டுகிறது. இதற்கு தீர்வு காணும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

மும்பையில் உள்ள அடிப்படை அறிவியல் மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சித்தேஸ் காக் என்பவர் நோய்த்தொற்றின் போது வாழைமரத்துக்கும், வேர் பாதிப்புக்கும்   இடையிலான மூலக்கூறு குறுக்கீட்டை புரிந்துகொள்ள மரபணு அணுகுமுறைகளைப் பயன்படுத்தினார்.

இதன் மூலம் டாக்டர் காக் குழுவினர், வாழையில் ஏற்படும் பனாமா எனும் வேர் தொற்று நோய்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய வாழைகள் உருவாக்க வழி ஏற்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677005

*******************

 



(Release ID: 1677056) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi