அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தொழில்துறை, கல்வி மற்றும் அரசுடன் இணைந்து செயல்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்ப பூங்கா

Posted On: 29 NOV 2020 5:46PM by PIB Chennai

பெங்களூருவில் நிறுவப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக் தொழில்நுட்ப பூங்கா, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு, வேளாண்மை, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சமூகத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டில் புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும்.

பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தால் செயற்கை நுண்ணறிவு ஃபௌண்டரியின் ஆதரவுடன் பொது தனியார் கூட்டமைப்பில் லாப நோக்கமற்ற அமைப்பாக இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை வழங்கியுள்ள ரூபாய் 170 கோடி நிதி உதவியுடன் செயல்படும் இந்த பூங்கா தொழில்துறை, கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுடன் இணைத்து செயல்படும்.

அண்மையில் நடைபெற்ற பூங்காவின் தொடக்கவிழாவில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் ஷர்மா, தொழில்துறை, கல்வி மற்றும் அரசு ஆகியவை   இணைந்து செயல்படுவது தொழில்நுட்பத்துறையில் ஒரு புதிய இணைப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும், விரைவில் வெளியிடப்படும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கொள்கை 2020 (ஸ்டிப்) இதனைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677000

 

*******************(Release ID: 1677028) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi