வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

8 கோடி தொழிற்சாலைகளின் அக்டோபர் மாத குறியீடு வெளியீடு

Posted On: 27 NOV 2020 5:00PM by PIB Chennai

எட்டு கோடி தொழிற்சாலைகளின் 2020 அக்டோபர் மாத குறியீடுகளை தொழில் வளர்ச்சி துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

எட்டு கோடி தொழில் நிறுவனங்களின் ஒருங்கிணைந்த குறியீடு கடந்த அக்டோபர் மாதத்தில் 124.2 ஆக உள்ளது. இது கடந்தாண்டு இதேகால குறியீடை விட 2.5 சதவீதம் குறைவு.

எட்டு கோடி தொழில் நிறுவனங்களின் குறியீடுகளின் சுருக்கம்:

நிலக்கரி உற்பத்தி 2020ம் ஆண்டு அக்டோபரில், கடந்தாண்டு இதே காலத்தைவிட  11.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த அக்டோபரில், கடந்தாண்டு இதே காலத்தை விட 6.2 சதவீதம் குறைந்துள்ளது.  இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த அக்டோபரில் 8.6 சதவீதம் குறைந்துள்ளது.

பெட்ரோலிய சுத்திகரிப்பு தயாரிப்புகள் கடந்த அக்டோபரில் 17 சதவீதம் குறைந்துள்ளது.

உரங்கள் உற்பத்தி கடந்த அக்டோபர் மாதத்தில் 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

எஃகு உற்பத்தி கடந்த அக்டோபரில் 17.92 சதவீதம் குறைந்துள்ளது.

சிமென்ட் உற்பத்தி கடந்த அக்டோபரில் 2.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்சார உற்பத்தி கடந்த அக்டோபரில் 10.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676471

*******************



(Release ID: 1676577) Visitor Counter : 203