வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழிலின் வளர்ச்சிக்கு புதிய சிந்தனைகளும், வடிவமைப்புகளும் அவசியம்: திரு பியுஷ் கோயல்
Posted On:
26 NOV 2020 6:02PM by PIB Chennai
ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழில் தற்சார்படைய வேண்டுமென்றால், அதில் ஈடுபட்டுள்ளோர் புதிதாக சிந்தித்து, செயலாற்றி, புதிய வடிவமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழில் தற்சார்பு டிஜிட்டல் மாநாட்டில் பேசிய அவர், தரத்தின் மீதான கவனம் மற்றும் போட்டித்திறன் கொண்ட விலை அமைப்பின் மூலமாக இந்திய ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழில் அமெரிக்க, ஐக்கிய அரபு எமிரேட்டு, ரஷ்யா, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்குள் நுழைய முடிந்திருக்கிறது என்றார்.
இந்தியாவின் ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழில், உலகத்தின் அங்கீகாரத்தை பெற்றிருக்கிறது என்றும், இதில் ஈடுபட்டுள்ளோர் தங்களது பொருட்களுக்கு வழங்கும் பொலிவும், அவற்றை விற்கும் விலையும் இதற்கு முக்கிய காரணங்களாக விளங்குவதாக திரு கோயல் குறினார்.
கொவிட் பெருந்தொற்று நமது நாட்டின் உறுதியை சோதித்து பார்த்தது என்றும், ரத்தின கற்கள் மற்றும் நகைகள் தொழில் மிகவும் பாதிப்படைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். "ஆனால், புதுமை, புத்தி கூர்மை மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளூம் தன்மையின் மூலம், இத்துறையின் வர்த்தகம் மீண்டும் அதிகரித்திருக்கிறது," என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676098
-----
(Release ID: 1676246)
Visitor Counter : 120