விவசாயத்துறை அமைச்சகம்

தேன் உற்பத்தியாளர்கள் அமைப்பு: சிறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக அரசின் புதிய முயற்சி

Posted On: 26 NOV 2020 3:46PM by PIB Chennai

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.

இணையம் மூலமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், புதிய தேன் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள், விவசாயிகள் மற்றும் விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகள் நாடு முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து பேசிய அமைச்சர், "இந்தியாவில் தேனீ வளர்ப்பு என்பது கிராமப்புற மற்றும் பழங்குடி மக்களிடையே பெரும்பாலும் அமைப்பு சாரா தொழிலாக விளங்கி வருகிறது. நமது நாட்டில் தேன் உற்பத்திக்கு நிறைய சாத்தியக்கூறுகள் இருக்கும் போதிலும், தேனீ வளர்ப்புத் தொழில் வளர்ச்சியடையாமல் உள்ளது," என்றார்.

இன்று தொடங்கப்பட்டுள்ள தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்பு, சிறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் லட்சியத்தை அடைய உதவும் என்று திரு தோமர் மேலும் தெரிவித்தார்.

'10,000 விவசாயி உற்பத்தியாளர் அமைப்புகளின் உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு' என்னும் திட்டத்தின் கீழ்,  தேன் விவசாயி உற்பத்தியாளர்கள் அமைப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் படிக்கவும்

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1676047&RegID=3&LID=1

-----



(Release ID: 1676077) Visitor Counter : 217