சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவை தலைவர்களின் 80-வது மாநாட்டை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 25 NOV 2020 5:47PM by PIB Chennai

அகில இந்திய நாடாளுமன்ற, சட்டமன்ற பேரவைத் தலைவர்களின் 80-வது மாநாட்டை, குஜராத்தின் கெவாடியாவில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று தொடங்கி வைத்தார்.

குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவையின் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இதில் உரையாற்றினர்.

இந்த வருடத்தின் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்த இரண்டு நாள் மாநாடு குஜராத்தில் உள்ள கெவாடியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்றும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவது அவசியம் என்றும் கூறினார்.

மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் நவம்பர் 26 அன்று பிற்பகல் 12.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

1921-ஆம் ஆண்டு அகில இந்திய சபாநாயகர்கள் மாநாடு தொடங்கியது. இதன் நூற்றாண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675698

*******************


(रिलीज़ आईडी: 1675772) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi