நிதி அமைச்சகம்
ரூ 25 கோடி வரி ஏய்ப்புக்காக 2 நபர்களை கைது செய்தது குருகிராம் ஜிஎஸ்டி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம்
Posted On:
20 NOV 2020 4:44PM by PIB Chennai
தில்லி நயா பஜாரில் நிறுவனங்களை நடத்தி வரும் திரு நரேஷ் மிட்டல் மற்றும் திரு செத்திலால் மிட்டல் ஆகியோரை சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவுப் பிரிவின் குருகிராம் மண்டல தலைமை இயக்குநரகம் கைது செய்துள்ளது.
ஹரியானவில் உள்ள பகதூர்கர்-ஐ சேர்ந்தவர்களான இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவார்கள். ரூ 25 கோடி உள்ளீட்டு வரி கடன் மோசடிக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2020 நவம்பர் 19-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். திகார் சிறையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருவரையும் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674404
**********************
(Release ID: 1674470)
Visitor Counter : 131