அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தசாப்தத்தின் மிகப் பெரிய சூரிய பிழம்பு பற்றி ஆர்யபட்டா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் ஆய்வு
Posted On:
19 NOV 2020 5:17PM by PIB Chennai
தசாப்தத்தின் மிகப் பெரிய சூரிய பிழம்பு பற்றிய, ஆர்யபட்டா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளின் ஆய்வு கட்டுரை வானியல் மற்றும் வானியற்பியல் இதழில் வெளிவரவுள்ளது.
சூரியனில் அவ்வப்போது ஏற்படும் தீப்பிழம்புகள் பற்றி விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். இதில் பல இன்னும் மர்மமாகவே உள்ளன.
இந்த தசாப்தத்தில் மிகப் பெரிய சூரிய பிழம்பு கடந்த 2017 செப்டம்பர் 10-ஆம் தேதி ஏற்பட்டது. அதில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிப்பட்ட மின்ம குமிழ்களை சூரிய இயற்பியலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதில் 20 மில்லியன் கெல்வினுக்கு மேல் வெப்பம் நிலவுவதும் புள்ளியல் பகுப்பாய்வில் கண்டறியப்பட்டது.
இது குறித்து மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், சர்வதேவ விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களின் ஆய்வறிக்கை, சூரிய பிழம்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மின்ம குமிழ்கள் இருக்கும் முதல் ஆதாரத்தை வெளியிடுகிறது. இது சூரிய பிழம்பு பற்றி இன்னும் ஆழமாக ஆராய உதவும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்;
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674048
**********************
(Release ID: 1674117)
Visitor Counter : 177