சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் உண்மையான மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்: டாக்டர் ஹர்ஷ் வர்தன்

Posted On: 16 NOV 2020 8:07PM by PIB Chennai

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் 147-வது அமர்வுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் திரு ஹர்ஷ் வர்தன் தில்லியில் இருந்து காணொலி மூலம் இன்று தலைமை தாங்கினார் 

நிகழ்ச்சியில் நிறைவுரை ஆற்றிய அவர், கொவிட்டுக்கு பிந்தைய உலகத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் வகையிலான லட்சியத்தை நமது சுகாதார பணியாளர்களிடம் நாம் விதைக்க வேண்டும் என்றார்.

"கடினமான முடிவுகளை எடுத்து, நமக்குள்ளேயிருந்து பெரும் மாற்றங்களை நாம் உருவாக்க வேண்டும்," என்று கூறிய அமைச்சர், உலகெங்கும் இருந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய நாடு முகமைகள் மற்றும் இதர அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் துவக்கவுரை ஆற்றிய டாக்டர் ஹர்ஷ் வர்தன், சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக உலகளாவிய பொது சுகாதாரத்தில் சர்வதேச கூட்டணிகள் மற்றும் முதலீட்டுக்கானத் தேவை குறித்து வலியுறுத்தினார்.

"அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது இல்லாமல், நல்ல எதிர்காலமென்பது இல்லை", என்று அவர் கூறினார்இது வரை கண்டிராத காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறிய திரு ஹர்ஷ் வர்தன், இருந்த போதிலும் 2020-ஆம் வருடம் கூட்டு நடவடிக்கைக்கான ஆண்டு என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1673260

----- 



(Release ID: 1673332) Visitor Counter : 148