சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
7 மாதங்களுக்குப் பின் இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி ‘ஹூனார்ஹாத்’ தொடக்கம்
Posted On:
11 NOV 2020 6:32PM by PIB Chennai
பாரம்பரியம் மிக்க இந்தியாவின் முதன்மை கைவினைஞர்களின் உள்நாட்டு தயாரிப்புகளைக் கொண்ட ‘ஹூனார்ஹாத்’ கண்காட்சி ஏழுமாதங்களுக்குப் பின்னர் தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
தில்லி ஹாத் பிதாம்புராவில் இம்மாதம் 11ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் ஹூனார்ஹாத் கண்காட்சியை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு.முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை(தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு.கிரண் ரிஜ்ஜு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடக்க விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு.முக்தர் அப்பாஸ் நக்வி, முதன்மை கைவினைஞர்களின் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் முன்னெடுக்கவும், `உள்ளூருக்காக குரல் கொடுப்போம்’, ஆத்மநிர்பார் பாரத் ஆகிய இயக்கங்களை வலுப்படுத்துவதற்குமான திறன்வாய்ந்த தளமாக ஹூனார்ஹாத் மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், கொரோனா தொற்றுக்குப் பின் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு ஹூனார்ஹாத் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டதால் நாடு முழுவதும் உள்ள லட்சகணக்கான முதன்மையான கைவினைஞர்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்றனர் என்று தெரிவித்தார்.
ஹூனார்ஹாத்தில் மரம், சணல், களிமண் ஆகியவற்றால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேர்த்தியான பொருட்கள் ஈர்க்கும் வகையில் உள்ளன என்றும் திரு.நக்வி கூறினார். மண்பாண்டங்கள், மூங்கில், மரம், உலோகங்கள், களிமண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட அரிய நேர்த்தியான பொருட்கள் விற்பனைக்காக காட்சியில் வைக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
ஹூனார்ஹாத் பொருட்களை ஆன்லைனில் வாங்க http://hunarhaat.org. என்ற இணையதளத்தை அணுகவும்.
மேலும் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671994
-------
(Release ID: 1672043)
Visitor Counter : 230