வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியாவின் வர்த்தகம்: 2020 அக்டோபர் மாதத்தின் ஆரம்பகட்ட தரவு

प्रविष्टि तिथि: 03 NOV 2020 3:28PM by PIB Chennai

2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 24.82 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 5.4 சதவீதம் குறைவாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் 150.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு இதே காலத்தை விட 19.05 சதவீதம் குறைவாகும்.

2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாட்டின் இறக்குமதி 33.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தை விட 11.56 சதவீதம் குறைவாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இந்தியாவின் இறக்குமதி 182.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 36.28 சதவீதம் எதிர்மறையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2020 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் நிகர இறக்குமதியின் வர்த்தக பற்றாக்குறை 8.78 பில்லியன் அமெரிக்க டாலர். இது கடந்தாண்டு அக்டோபரில் பதிவான 11.76 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக பற்றாக்குறை உடன் ஒப்பிடும் போது 25.34% என்னும் அளவுக்கு கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலியம் அல்லாத மற்றும் ரத்தின கற்கள் இல்லாத நகைகளின் ஏற்றுமதி 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 20.28 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதன் அளவு 19.07 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 6.34 சதவீதம் நேர்மறை வளர்ச்சியாகும்.

எண்ணெய் அல்லாத மற்றும் தங்கம் அல்லாத பொருட்களின் இறக்குமதி இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 22.83 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்தாண்டு அக்டோபர் மாதம் 24.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 8.31% எதிர்மறையான வளர்ச்சியாகும்.

பிற தானியங்கள் (369.30%), அரிசி (112.15%),எண்ணெய் உணவுகள் (76.62%), இரும்புத் தாது (73.89%) , எண்ணெய் விதைகள் (54.06%) உள்ளிட்டவை கடந்த அக்டோபர் மாத ஏற்றுமதியில் நேர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

வெள்ளி (-90.54%), செய்தித்தாள் (-79.99%), கச்சா பருத்தி மற்றும் கழிவுகள் (-77.40%) பருப்புகள் (-65.15%), போக்குவரத்து உபகரணங்கள் (-56.32%) உள்ளிட்டவை கடந்த அக்டோபர் மாத இறக்குமதியில் எதிர்மறையான வளர்ச்சியைக் கண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669762

******

(Release ID: 1669762)


(रिलीज़ आईडी: 1669814) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese