நிதி அமைச்சகம்

புதிய ஜிஎஸ் 2023-ன் ஏல விற்பனை (வெளியீடு)

Posted On: 23 OCT 2020 7:58PM by PIB Chennai

 (1)ஆதாயம் அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.6,000 கோடி (மிகக்குறைந்த அளவில்) தொகைக்கு புதிய அரசு பங்கு 2023-க்கான இந்திய அரசு விற்பனை (வெளியீடு/மறுவெளியீடு) அறிவிகப்பட்டுள்ளது.

இது தவிர (2)விலை அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.3000கோடி (குறைந்த அளவில்) தொகைக்கான இந்திய அரசின் ஏற்ற, இறக்கத்துடன் கூடிய விகித பத்திரங்கள், (3) ஆதாய அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.9000 கோடி(குறைந்த அளவில்) தொகைக்கு புதிய அரசு பங்கு 2035 அறிக்கையிடப்பட்டுள்ளது.  (4) ஆதாய அடிப்படையிலான ஏலம் வாயிலாக ரூ.5000 கோடி(குறைந்த அளவில்) தொகைக்கு புதிய அரசு பங்கு 2050 அறிக்கையிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பத்திரங்களுக்கும் எதிராக ரூ.2000 கோடி கூடுதல் சந்தாவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான விருப்பம் இந்திய அரசின் வசம் இருக்கிறது. இதற்கான ஏலம் மும்பையில் உள்ள கோட்டை, மும்பை அலுவலகத்தின் இந்திய ரிசர்வ் வங்கியால் 2020 அக்டோபர் 29-ம் தேதி (வியாழக்கிழமை) பல அலகு விலை முறையை உபயோகித்து நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667138

---


(Release ID: 1667214) Visitor Counter : 140