மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ஐஐடி பாலக்காடின் பிரதான வளாகத்துக்கான அடிக்கல்லை கேரள முதல்வருடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சர் நாட்டினார்

Posted On: 23 OCT 2020 6:46PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' மற்றும் கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) பாலக்காடின் பிரதான வளாகத்துக்கான அடிக்கல்லை இன்று நாட்டினர்.

மேலும், மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்த விழாவின் போது, ஐஐடி பாலக்காடின் தற்காலிக வளாகமான நிலாவையும் அவர்கள் திறந்து வைத்தனர். வெளியுறவுத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர் திரு வி முரளிதரன், கேரள உயர்கல்வி அமைச்சர் டாக்டர் கே டி ஜலீல், மற்றும் மாநிலத்தின் இதர அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்', கடந்த ஐந்து வருடங்களில் ஐஐடி பாலக்காடு சிறப்பான வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சிறந்த பங்காற்றி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இளநிலை படிப்புகளில் 640 மாணவர்களையும், முதுநிலை படிப்புகளில் 225 மாணவர்களையும், முனைவர் பட்டப் படிப்புகளில் 132 மாணாவர்களையும் இந்த நிறுவனம் தன்னகத்தே கொண்டிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் கூறினார்.

விழாவில் பேசிய கேரள முதல்வர் திரு விஜயன், மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் உளப்பூர்வமான ஆதரவோடு ஐஐடி பாலக்காடு அப்பகுதியின் தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்து வருவதாகக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1667100

                                                                          -----


(Release ID: 1667174) Visitor Counter : 116