பாதுகாப்பு அமைச்சகம்

செகந்திரபாத்தில் பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் பைஷன் படைப்பிரிவை பார்வையிட்டார் ராணுவ தளபதி

Posted On: 21 OCT 2020 5:46PM by PIB Chennai

செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரி மற்றும் பைசன் படைப்பிரிவை ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே  பார்வையிட்டார். பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் இடையே ராணுவ தளபதி கலந்துரையாடினார்.  அப்போது, தற்போதைய பாதுகாப்பு சூழல், புவி யுக்தியின் தாக்கங்கள், திறன் மேம்பாடு, ராணுவ படையின் பயன்பாடு, நவீனமயமாக்கல், ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து பேசினார்.

போர் மற்றும் அமைதி காலங்களில் முப்படைகளும் இணைந்து செயல்பட, முப்படை தளபதி பதவி, ராணுவ விவகாரத்துறை (DMA) ஆகியவற்றை  மத்திய அரசு உருவாக்கியது மிகச் சிறப்பான முடிவு என்றும் இது நீண்ட கால கோரிக்கை என்றும் ராணுவ தளபதி நரவானே கூறினார்.

பாதுகாப்பு மேலாண்மை கல்லூரியில், நிர்வாகம், தொழில்நுட்பம், யுக்திகள் தொடர்பான பணிகளை ராணுவ தளபதி பாராட்டினார்.  இந்நிகழ்ச்சியில் பொன்விழா ஆண்டு நினைவு இதழையும் அவர் வெளியிட்டார்.

 

செகந்திராபாத்தில் பைசன் படைப்பிரிவை பார்வையிட்ட ராணுவ தளபதிக்குபாதுகாப்பு மற்றும் தயார் நிலை குறித்து மேஜர் ஜெனரல் அலோக் ஜோஷி விளக்கினார். பைசன் படைப்பிரிவின் செயல்பாடுகளையும், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பைசன் படைப்பிரிவின் மீட்பு பணிகள், மற்றும் கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். அதன்பின்னர், செகந்திராபாத்தில் உள்ள சிமுலேட்டர் மேம்பாட்டு பிரிவு, அபாச்சி ஹெலிகாப்டர் தயாரிப்பாக ஐதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ள  டாடா போயிங் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஆகியவற்றையும் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666477



(Release ID: 1666680) Visitor Counter : 152


Read this release in: English , Urdu , Hindi , Manipuri