புவி அறிவியல் அமைச்சகம்
ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
Posted On:
21 OCT 2020 5:13PM by PIB Chennai
இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் / மண்டல வானிலை மையம், புது தில்லி, கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் சில பகுதிகளில் அக்டோபர் 23-ஆம் தேதி அன்று பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1666449
----
(Release ID: 1666609)
Visitor Counter : 125