இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

முன்னுரிமை விளையாட்டு ஜூடோவை ஊக்குவிப்போம்: மத்திய அமைச்சர் கிரிண் ரிஜிஜூ பேட்டி

Posted On: 19 OCT 2020 8:52PM by PIB Chennai

 ‘‘ஜூடோ நமக்கு முன்னுரிமை விளையாட்டு, அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்’’ என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ கூறினார்.   

ஜப்பானிய போர் முறை என அழைக்கப்படும் ஜூடோ விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளது. இதனால் இதற்கு இந்தியா தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஹங்கேரியில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை, புடாபெஸ்ட் கிராண்ட் ஸ்லாம் போட்டி நடக்கிறது. இதில்  கலந்து கொள்ள செல்லும் இந்திய ஜூடோ குழுவினரை மத்திய விளையாட்டு அமைச்சர்  திரு. கிரண் ரிஜிஜூ தனது வீட்டில் சந்தித்து பேசினார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

புடாபெஸ்ட் கிராண்ட் ஸ்லாம் போட்டிஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதியை அளிக்கிறது. இந்த குழுவில், 5 ஜூடோ வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஜீவன் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  2024 மற்றும் 2028 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.  ஹங்கேரிக்கு செல்லும் இந்த குழுவினரில் சில வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவர் என நம்புகிறேன்.    ஜூடோ நமக்கு முன்னுரிமை விளையாட்டு. இதில் நமது வீரர்களின் திறனையும், பயிற்சியையும் நாம் அதிகரிப்போம்.   முன்னணி விளையாட்டு வீரர்களுக்கு முழு அதரவு அளிக்கப்படும். அதோடு, 2024 மற்றும் 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்களை உருவாக்கப்படுவர். இதற்கான விரிவான திட்டங்கள் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665927



(Release ID: 1666022) Visitor Counter : 139