நிதி அமைச்சகம்
நிதி தொழில்நுட்ப தீர்வுகளுக்கு புதிய கட்டமைப்பு குஜராத்தில் அறிமுகம்
Posted On:
19 OCT 2020 6:08PM by PIB Chennai
நிதி சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் தொழில்நுட்ப தீர்வுகளுக்கு ‘சாண்ட்பாக்ஸ் ஒழுங்குமுறை’ என்ற புதிய கட்டமைப்பு குஜராத்தில் அறிமுகம் செய்யப்ப்டடுள்ளது.
குஜராத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள கிஃப்ட் நகரில், உலகத் தரம் வாய்ந்த நிதி தொழில்நுட்ப மையத்தை உருவாக்கும் நோக்கத்தில், வங்கி, காப்பீடு, பங்கு விற்பனை போன்ற துறைகளில், நிதி தொழில்நுட்ப முயற்சிகளை மேம்படுத்த சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (ஐ.எஃப்.எஸ்.சி.ஏ), முயற்சிக்கிறது.
இந்த தொலை நோக்கை அடையும் நடவடிக்கையாக ‘சாண்ட்பாக்ஸ்ஒழுங்குமுறை’ என்ற கட்டமைப்பை ஐஎப்எஸ்சிஏ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கட்டமைப்பின் கீழ், நிதி சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் புதுமையான நிதி தொழில்நுட்ப தீர்வுகளை பரிசோதித்து பார்க்க முடியும். இதில் முதலீட்டாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இந்த சாண்ட் பாக்ஸ் ஒழுங்குமுறை, ஐஎப்எஸ்சி அமைந்துள்ள கிப்ட் நகரில் மட்டும் செயல்படுத்தப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665858
(Release ID: 1666016)