பாதுகாப்பு அமைச்சகம்

அம்பாலா ராணுவ முகாமில் ராணுவ தளபதி ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 19 OCT 2020 8:53PM by PIB Chennai

அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள  ராணுவ முகாமுக்கு இன்று  சென்ற ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே, அங்குள்ள கார்கா படைப்பிரிவின் தயார் நிலையை ஆய்வு செய்தார்.

அவருக்கு படைப்பிரிவின் தயார் நிலை குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.எஸ் மகல் விளக்கினார். அதன்பின் ராணுவ கமாண்டர்களுடன், தரைப்படை தளபதி ஜெனரல் நரவானே உரையாடினார். படைப்பிரிவின் தயார் நிலை நடவடிக்கைகள் மற்றும் கொவிட்-19-க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ராணுவ தளபதி பாராட்டினார். எதிர்காலத்தில் எந்த சவால்களையும் சந்திக்கராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி அவர் அறிவுறுத்தினார். அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தையும், பார்வையிட்ட ராணுவ தளபதி, படைகள் இடையேயான ஒருங்கிணைப்பையும் பாராட்டினார்.

----- 


(வெளியீட்டு அடையாள எண்: 1665965) வருகையாளர் எண்ணிக்கை : 246
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi