நிதி அமைச்சகம்

பாரத ஸ்டேட் வங்கியில் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை

Posted On: 16 OCT 2020 7:57PM by PIB Chennai

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் செலவுகளுக்கான நன்கொடைகளை , தேர்தல் பத்திரங்கள்  மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ம் ஆண்டு அறிவித்தது.  இதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தேர்தல் பத்திரங்களைபாரத ஸ்டேட் வங்கி தனது 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் 19.10.2020 முதல் 28.10.2020 வரை விற்பனை செய்கிறது. மாநிலங்களின் தலைநகரில் உள்ள முக்கிய கிளைகளில் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். தமிழகத்தில் சென்னை பாரீஸில் உள்ள  பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய கிளையில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். இந்த தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்குள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களை  டெபாசிட் செய்து பணமாக்கி கொள்ள வேண்டும். டெபாசிட் செய்த அதே நாளில், அரசியல் கட்சிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். 15 நாட்களுக்குப்பின் தேர்தல் பத்திரங்களை தாக்கல் செய்தால் பணம் வழங்கப்படாது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665259

**********************


(Release ID: 1665312) Visitor Counter : 227