நிதி அமைச்சகம்
அரசுப் பங்குகளுக்கான அட்டவணை (19 அக்டோபர் 2020 – 31 மார்ச் 2021) வெளியீடு
இடுகை இடப்பட்ட நாள்:
15 OCT 2020 9:37PM by PIB Chennai
ரூ 1,10,000 கோடி சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கான ஒற்றை சாளர முறையை செயல்படுத்துவதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியுடனான ஆலோசனைக்குப் பிறகு, இந்திய அரசின் கடன் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
2020-21 நிதி ஆண்டின் மிச்சமிருக்கும் காலத்தில் (2020 அக்டோபர் 19 முதல் 2021 மார்ச் 31 வரை), சுமார் ரூ 4,88,000 கோடியை இந்திய அரசு கடனாக வாங்கும்.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் இழப்பீட்டை ஈடுகட்டுவதற்கான கூடுதல் தொகை ரூ 55,000 கோடி சமமாக 3 வருட மற்றும் 5 வருட கெடுவில் பெறப்படும்.
அரசுப் பங்குகள் பற்றிய விவரங்கள் அடங்கிய உத்தேச அட்டவணையை ( 2020 அக்டோபர் 19 முதல் 2021 மார்ச் 31 வரை) ), அரசு வெளியிட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இந்த இணைப்புக்கு செல்லவும் :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664946
(வெளியீட்டு அடையாள எண்: 1665110)
வருகையாளர் எண்ணிக்கை : 166