ஜல்சக்தி அமைச்சகம்
நாகாலாந்தில் உள்ள தொலைதூர கிராமங்களை ஜல் ஜீவன் இயக்கம் மேம்படுத்துகிறது, வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது
प्रविष्टि तिथि:
15 OCT 2020 6:19PM by PIB Chennai
நாகாலாந்தின் பேக்கின் மாவட்டத்தில் உள்ள டெகவுபா என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்களின் சமுதாய கூட்டுறவு உணர்வு மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
5.5 கிலோமீட்டர் தொலைவில் போதுமான அளவுக்கு தண்ணீர் ஆதாரம் இருந்தாலும் அதை கிராமத்துக்கு கொண்டு வருவது சவாலான விஷயமாக இருந்தது.
எனவே, கிராமக் குழு மற்றும் உள்ளூர் தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுவின் தலைமையின் கீழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தேவையான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களை பெற்று, தண்ணீர் விநியோக அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதன் மூலம் தற்போது 553 வீடுகளுக்கு தண்ணீர் விநியோகம் தொடர்ந்து கிடைக்கிறது.
இதேபோன்று, வேதாமி என்னும் கிராமத்தில் உள்ளவர்களும் ஜல் ஜீவன் இயக்கம் தங்களது வாழ்வை எவ்வாறு எளிமைப்படுத்தி மேம்படுத்தியுள்ளது என்பது பற்றி மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு, நாகாலாந்தில் உள்ள தொலைதூர கிராமங்களை ஜல் ஜீவன் இயக்கம் மேம்படுத்தி, வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளது.
2024-ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் தண்ணீர் குழாய் இணைப்பை உறுதி செய்வதை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல்
ஜீவன் இயக்கம் லட்சியமாகக் கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664843
(रिलीज़ आईडी: 1665082)
आगंतुक पटल : 136