மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ரூர்கே ஐஐடி-யில் புதிய விரிவுரை அரங்க வளாகத்தை திறந்து வைத்தார் மத்திய கல்வி அமைச்சர்
Posted On:
13 OCT 2020 6:24PM by PIB Chennai
ரூர்கே ஐஐடியில் புதிய விரிவுரை அரங்க வளாகம், வெப்பம், காற்றோட்டம் மற்றும் குளிர்சாதன வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் மத்திய கல்வி அமைச்சர் திரு.ரமேஷ் பொக்கிரியால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு.சஞ்சய் தோத்ரேவும் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால், ‘‘ரூர்கே ஐஐடி ஆசியாவிலேயே மிகப் பழமையான தொழில்நுட்ப மையம் எனவும், இது நாட்டின் கவுரவமாக திகழ்வதாகவும் கூறினார். முன்னணி கல்வி நிறுவனமாக விளங்கும் ரூர்கே ஐஐடி, புதிய இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் தொலைநோக்குக்கு சிறப்பான பங்களிப்பை அளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் இளைஞர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கான புதிய கட்டமைப்பை, புதிய கல்வி கொள்கை -2020 வழங்கியுள்ளதை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் எடுத்துரைத்தார்.
வேகமாக மாறிவரும் உலகத்தையும், எதிர்கால சவால்களையும், தேவைகளையும் மனதில் கொண்டு, கல்வி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
தேசிய கல்வி கொள்கை 2020-ஐ அமல்படுத்துவது, மாணவர்களை பலப்படுத்தும் என்றும், இந்தியாவை வளர்ந்த, டிஜிட்டல் மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்றுவதற்கான பாதையை வழங்கும் என்று அமைச்சர் திரு.ரமேஷ் பொக்கிரியால் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664053
**********************
(Release ID: 1664168)
Visitor Counter : 72