உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகத்தின் மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் இதர வசதிகளைக் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்
Posted On:
13 OCT 2020 7:27PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா திட்டத்தின் குறிக்கோளை அடைய, வேளாண் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவது அவசியம் என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகத்தில், மாணவர்கள் தங்கும் விடுதி மற்றும் சோதனை முயற்சியில் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் காணொலிக் காட்சி வாயிலாக இன்று அவர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உணவு பதப்படுத்தும் துறைக்கு முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்தார். உணவு பதப்படுத்தும் துறையை மேம்படுத்துவதன் மூலம் வேளாண் துறை அபரிமிதமான வளர்ச்சியை ஈட்டுவதுடன், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையுடன் தனது அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பக் கழகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிதாக பெறப்பட்டுள்ள நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நாட்டினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664092
**********************
(Release ID: 1664163)
Visitor Counter : 127