புவி அறிவியல் அமைச்சகம்

மேற்கு மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு வடமேற்காக நகர்ந்து விசாகபட்டிணத்தில் இருந்து தென்கிழக்கே 330 கி.மீ, காக்கி நாடா(ஆந்திரா)வுக்கு கிழக்கு தென்கிழக்கே370 கி.மீ மற்றும் நர்சாபூரு(ஆந்திரா)க்கு கிழக்கு தென்கிழக்கே 400 கி.மீ-லும் மையம் கொண்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2020 9:08PM by PIB Chennai

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ள தகவல்;

மேற்கு மத்திய வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு வடமேற்காக கடந்த 6 மணி நேரமாக மணிக்கு  07 கி.மீ வேகத்தில் 2020 அக்டோபர் 11 நேற்று மாலை 5.30 மணி நேரப்படி  விசாகப்பட்டிணத்துக்கு தென்கிழக்கே 330 கி.மீ தூரத்திலும், காக்கி நாடா(ஆந்திரா)வுக்கு கிழக்கு தென்கிழக்கே370 கி.மீ மற்றும் நர்சாபூரு(ஆந்திரா)க்கு கிழக்கு தென்கிழக்கே 400 கி.மீ-லும் மையம் கொண்டிருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் மேற்கு வடமேற்காக நகரும் என்றும் மற்றும் வடக்கு ஆந்திர கடலில் நர்சாபூர் & விசாகபட்டிணம் இடையே இன்று இரவு 08.20 மணிக்கு கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கை;

1.      மழை எச்சரிக்கை

கடலோர ஆந்திர பிரதேச மாநிலம், தெலங்கானா, ராயலசீமா மற்றும் கர்நாடகா மாநிலத்தின் வடக்கு உள்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும், பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையும் மழை பெய்யும்.

தெற்கு ஒடிசா& அருகில் உள்ள சத்தீஸ்கர், கடலோர ஆந்திர பிரதேசம், தெலங்கானா, ராயலசீமா, கர்நாடகா & வடக்கு கேரளா பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். மத்திய மகாராஷ்டிரா, மாராத்வாடா மற்றும் விதர்பாவில் ஒரு சில இடங்களில் கனமழைபெய்யும். வடக்கு கடலோர ஆந்திரா பகுதியில் ஒரு சில பகுதிகளில் 2020 அக்டோபர் 12-ம் தேதி அதிதீவிர கனமழை பெய்யும்(நாளொன்றுக்கு 20 செ.மீ-க்கு அதிகமாக). அதே நாளில் கடலோர கர்நாடகா மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் வடக்கு கேரளாவில் ஒரு சில இடங்களிலும் அதி தீவிர கனமழை பெய்யும்.

மாராத்வாடாமத்திய மகாராஷ்டிரா, கர்நாடாவின் வடக்கு உள்பகுதிகள், தெலங்கானா பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையிலும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையும் மழை பெய்யக்கூடும். தெற்கு ஒடிசா, கடலோர ஆந்திரா, ராயலசீமா, கடலோர கர்நாடகா மற்றும் விதர்பானில் 2020 அக்டோபர் 13-ம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

  மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663605

*******

(Release ID: 1663605)


(வெளியீட்டு அடையாள எண்: 1663647) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Manipuri