நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

சமீபத்தில் அதிகரித்த துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலைகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

Posted On: 10 OCT 2020 8:42PM by PIB Chennai

நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு, சமீபத்தில் அதிகரித்த துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பின் விலைகளை குறைப்பதற்கான  நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

பருப்புகளின் சில்லரை விலைகளை மாற்றி அமைக்க, அரசின் சேமிப்பில் இருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை + 10% எனும் சலுகை விலையில் மொத்தமாகவோ அல்லது சில்லரை பொட்டலங்களிலோ பருப்புகளை விநியோகிக்கும் திட்டத்தை நுகர்வோர் விவகாரங்கள் துறை ஏற்கனவே அறிவித்தது.

சில்லரை இடையீட்டின் தாக்கத்தை இன்னும் அதிகப்படுத்த கூடிய வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது மாறக்கூடிய ஒதுக்கீடு விலை ஆகிய இரண்டில் எது குறைவோ அதற்கேற்றார் போல் போல் சில்லரை இடையீட்டை மாற்ற முடிவெடுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கரிப் 2018 பருவத்தின் உளுத்தம்பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 79-க்கும், கரிப் 2019 பருவத்தின் உளுத்தம்பருப்பு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 81-க்கும் வழங்கப்படுகிறது.

துவரம் பருப்பு ஒரு கிலோ ரூபாய் 85-க்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகையை மொத்தமாக அல்லது சில்லரையாக பயன்படுத்திக்கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663441

 ---- 



(Release ID: 1663452) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Telugu