தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்களின் இபிஎப் கணக்குகள் மற்றும் நிதியை மொத்தமாக மாற்றும் வசதி தொடக்கம்

Posted On: 09 OCT 2020 7:21PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திரு அபூர்வா சந்திராதில்லியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎப்ஓதலைமையகத்துக்கு கடந்த 7ம் தேதி அன்று முதல் முறையாக சென்றார். அப்போது, விலக்கு பெற்ற நிறுவனங்கள், தொழிலாளர்களின் கணக்கு மற்றும் பணத்தை மொத்தமாக இபிஎப்ஓ-வுக்கு மாற்றும் வசதியை தொடங்கி வைத்தார்

இதன் மூலம் விலக்கு பெற்ற நிறுவனங்கள், வெளியேறும் தொழிலாளர்களின் கணக்குகள் மற்றும் நிதியை மொத்தமாக ஒரு நேரத்தில் மாற்ற முடியும்தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை இபிஎப்ஓ கண்காணிப்பில் சொந்தமாக நிர்வகிக்க சில நிறுவனங்கள் விலக்கு பெற்றுள்ளன. அங்கிருந்து  பணியாளர்கள் வேறு நிறுவனங்களுக்க செல்லும் போது, அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகள்இபிஎப்ஓ அலுவலகத்துக்கு முன்பு ஒவ்வொன்றாக மாற்றபட்டு வந்தன. இதனால் பல சிரமங்கள் ஏற்பட்டது. தற்போது வெளியேறும் தொழிலாளர்களின் கணக்குகளையும், நிதியையும் ஒரே நேரத்தில் மொத்தமாக மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இபிஎப்ஓ மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்கள் இடையேயான பரிமாற்றம் அனைத்தும் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் நிதியை ஒரே நேரத்தில் மொத்தமாக மாற்றுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது. இந்த நடவடிக்கை மூலம் விலக்கு பெற்ற 1500 நிறுவனங்கள் பயனடையும்.

-----



(Release ID: 1663381) Visitor Counter : 173


Read this release in: English , Urdu , Hindi , Telugu