நிதி அமைச்சகம்
போலியான நிறுவனங்களை உருவாக்கி உள்ளீட்டு வரிப் பணம் ரூ 190 கோடி மோசடி செய்த நபரை சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகம் கைது செய்தது
Posted On:
09 OCT 2020 5:32PM by PIB Chennai
போலியான நிறுவனங்களை உருவாக்கி உள்ளீட்டு வரிப் பணம் ரூ 190 கோடி மோசடி செய்த புது தில்லியை சேர்ந்த முகமது சம்ஷத் சைபி என்பவரை சரக்கு மற்றும் சேவை வரி நுண்ணறிவு தலைமை இயக்குநரகத்தின் குருகிராம் மண்டல பிரிவு கைது செய்தது.
செயல்படாத அல்லது போலி நிறுவனங்களிடம் இருந்து வாங்காத பொருட்களுக்கு ரசீது பெற்று, அதன் மூலம் உள்ளீட்டு வரிப் பணத்தை (ஐடிசி), நிறுவனங்கள் திரும்ப பெற்று, அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியது குறித்து ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டிஜிஜிஐ) தகவல் திரட்டினர்.
திருவாளர்கள் டெக்னோ எலக்ட்ரிகல் மற்றும் திருவாளர்கள் லதா சேல்ஸ் என்னும் நிறுவனங்களை புது தில்லியை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கிய முகமது சைபி, அவற்றின் பெயரில் போலியான ஆவணங்களை தயார் செய்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.
புது தில்லியை மையமாகக் கொண்டு மேலும் நான்கு நிறுவனங்களை முகமது சம்ஷத் சைபி போலியாக நிறுவியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சரக்குகளை விநியோகம் செய்யாமலலேயே இந்த நிறுவனங்கள் ரசீதுகளை போலியாக தயார் செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663176
------
(Release ID: 1663250)
Visitor Counter : 108