நிதி ஆணையம்

நிதி நிலைத்தன்மையை பாதுகாத்தல்: கொவிட்-19 நெருக்கடியை கடந்து செல்லும் வழிகள்

Posted On: 07 OCT 2020 5:02PM by PIB Chennai

காமன்வெல்த் நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் 2020-இல் பேசிய 15-வது நிதி ஆணையத்தின் தலைவர் திரு என் கே சிங், பெருந்தொற்றின் போது நிதி சகிப்புத்தன்மையின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

சாதாரண காலங்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி விதிகள் இது போன்ற கடினமான காலகட்டத்துக்கு பொருந்தாது என்று கூறிய அவர், இது மாதிரியான நெருக்கடியை கையாண்டதற்கான உதாரணங்களும் கடந்த காலத்தில் இல்லை என்றார்.

"நமது நிதி நிறுவனங்களுக்கு முன் உள்ள முதல் சவால் நிதி சகிப்புத்தன்மைக்கான விதிகளை எவ்வாறு வகுப்பதென்பது தான். நியாயமான, சரியான மற்றும் நிலையான விதிகள் உருவாக்கப்பட வேண்டும்," என்று திரு சிங் தெரிவித்தார்.

இதற்கு முன் உலகை தாக்கிய ஸ்பானிஷ் காய்ச்சல் 102 ஆண்டுகளுக்கு முன், அதாவது ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி மற்றும் அனைத்துலக நாணய நிதியம் ஆகிய அமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன், வந்ததாகவும், எனவே பெருந்தொற்றின் நிதி சவால்களை தற்போது தான் முதல் முறையாக பன்முக நிதி நிறுவனங்கள் எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662354

------ 



(Release ID: 1662518) Visitor Counter : 150


Read this release in: English , Urdu , Hindi , Telugu