மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
ரெய்ஸ் 2ம் நாள் மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மேம்பாடுகள், ஒருங்கிணைந்த வளர்ச்சியில் அதன் பங்கு குறித்து நிபுணர்கள் ஆலோசனை
Posted On:
06 OCT 2020 8:52PM by PIB Chennai
ரெய்ஸ் 2020- இரண்டாம் நாள் மாநாட்டில், உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 55 நிபுணர்கள், 10 கூட்டங்களில் பேசினார். நிதி ஒருங்கிணைப்பு, கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் வலுவான டிஜிட்டல் தளங்களை அமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு ஆகியவை குறித்து ஆலோசித்தனர்.
இரண்டாம் நாள் நிகழ்சிக்கு தலைமை தாங்கிய திரு. மோகன்தாஸ் பாய், செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் நிதி சேவைகள் குறித்து முக்கிய உரையாற்றினார்.
நேஷனல் பேபன்ட்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு திலிப் ஆஸ்பே பேசுகையில், ‘‘நாட்டில் நிதி ஒருங்கிணைப்பை செயல்படுத்துவதில், செயற்கை நுண்ணறிவு வினையூக்கியாக செயல்படுகிறது எனவும், இதுவரை விதிமுறை அடிப்படையில் உள்ள நிதி சேவைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, முடிவெடுக்கும் உதவிகளை அளித்து, ஒட்டு மொத்த நடைமுறையையும் விரைவாக்கும்’’ என தெரிவித்தார்.
உதய் அமைப்பின் மேலாளர் டாக்டர் விவேக் ராகவன் பேசுகையில், ‘‘ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தற்போதுள்ள டிஜிட்டல் சூழல் முறையில், செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் விவரித்தார்.
ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் திரு ரவி சங்கர் பேசுகையில், வலுவான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். ‘‘தரவு நிலைப்பாட்டில், வலுவான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை உருவாக்குவதற்கான முக்கிய அம்சங்கள்: தரவு மூலத்தின் சட்டபூர்வமான தன்மை, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை, சேகரிக்கப்பட்ட தரவுகளின் ஒருமைப்பாடு, தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையை உறுதி செய்தல், பொறுப்பான மற்றும் நம்பகமான தரவு அணுகல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தரவு நிதி கட்டமைப்பில் வைப்பது ” என குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1662157
*******
(Release ID: 1662157)
(Release ID: 1662241)
Visitor Counter : 111