பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தின் எல்லைப் பகுதி விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்
Posted On:
03 OCT 2020 7:23PM by PIB Chennai
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நேற்று ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் வசிக்கும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட புதிய வேளாண் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள் குறித்து அப்போது அவர் கருத்துக்களை பரிமாறினார்.
கடந்த காலங்களில் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்வதில் இடைத்தரகர்கள் முக்கிய பங்கு வகித்து வந்தனர். எனினும் இன்றைய நிலையில் கல்வியறிவு பெற்ற இளம் விவசாயிகள் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வதால், இடைத்தரகர்களின் உதவி இன்றி விவசாயிகள் தாங்களே நேரடியாக தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இன்றைய விவசாயிகள் ஒரு வேளாண் தொழில்நுட்பவாதிகள் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், கணினியின் உதவியுடன் இருந்த இடத்திலிருந்தே அவர்களால் பருவநிலைக்கு ஏற்ற பயிர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறினார். மேலும் இணைய வசதியின் மூலம் தங்களுக்கு உகந்த வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் அவர்களுக்கு இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வேளாண் தொழில்நுட்பவாதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டே அவர்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி வேளாண்துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த புதிய திட்டம் விவசாயிகளின் நலனை நிச்சயம் பாதுகாக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.
****************
(Release ID: 1661583)
Visitor Counter : 126