நித்தி ஆயோக்
அதி நவீன சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தி குறித்து ‘இந்தியா பிவி எட்ஜ் 2020’ இணைய கருத்தரங்கில் முன்னனி கொள்கை வகுப்பாளர்கள் பேசவுள்ளனர்
Posted On:
04 OCT 2020 9:35AM by PIB Chennai
இந்தியாவில் அதிநவீன சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க, ‘இந்தியா பிவி எட்ஜ் 2020’ என்ற தலைப்பில் உலகளாவிய இணைய கருத்தரங்குக்கு நிதி ஆயோக், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் இன்வெஸ்ட் இந்தியா ஆகிய அமைப்புகள் வரும் 6ம் தேதி மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை ஏற்பாடு செய்துள்ளன.
‘வேஃபர்ஸ் மற்றும் செல்கள்’, ‘தொகுதிகள் மற்றும் உற்பத்தி உபகரணங்கள்’ மற்றும் ‘விநியோக சங்கிலி’ ஆகியவை பற்றிய முழுமையான அமர்வு மற்றும் அடுத்தடுத்த அமர்வுகள் இந்த கருத்தரங்கில் நடைபெறும். தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன. அதன்பின் முதலீட்டாளர்களின் வட்ட மேஜை ஆலோசனை நடைபெறும். இதில் இந்தியாவில் அதிநவீன சூரிய மின்சக்தி தகடுகளை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்குதல், நிதியுதவி போன்ற விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும்.
மத்திய மின்துறை மற்றும் புதிய மற்றம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங், நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் உட்பட பலர் இதில் கலந்து கொள்வர். இந்தியாவின் பிரபல நிறுவனங்களின், 60 தலைமை நிர்வாக அதிகாரிகள், இந்த கருத்தரங்கில் காணொலி காட்சி மூலம் பங்கேற்கவுள்ளனர்.
சூரிய மின்சக்தி உற்பத்தியில், உலகின் 3வது பெரிய நாடாக இந்திய உருவாகியுள்ளது. 2030ம் ஆண்டுக்குள், 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1661481
****************
(Release ID: 1661534)