நிதி அமைச்சகம்

ஆதாரத்தில் வசூலிக்கப்படும் வரிக்கான புதிய விதிகள் குறித்த சந்தேகங்களுக்கான விளக்கம்

प्रविष्टि तिथि: 30 SEP 2020 6:47PM by PIB Chennai

நிதி சட்டம் 2020-இன் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான ஆதாரத்தில் வசூலிக்கப்படும் வரிக்கான புதிய விதிகள் குறித்த சந்தேகங்களுக்கான விளக்கத்தை நிதியமைச்சகம் அளித்துள்ளது.

 

சில ஊடகங்களில் வந்திருந்த செய்திகளில் எழுப்பப்பட்ட சந்தேகங்களை தொடர்ந்து அவற்றை தெளிவுபடுத்துவதற்காக இந்த செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

வாடிக்கையாளர் ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ 50 லட்சத்துக்கும் மேல் பொருட்களை வாங்கினால், 2020 அக்டோபர் 1-இல் இருந்து 0.1 சதவீதம் வரியை விற்பவர் வசூலிக்க வேண்டும் என்று நிதி சட்டம் 2020 கூறுகிறது.

 

மேலும், வரி தாக்கல் சுமையை குறைப்பதற்காக, விற்பனையாளரின் விற்றுமுதல் கடந்த வருடத்தில் ரூபாய் 10 கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அவர் வரியை வசூலிக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

 

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1660392


(रिलीज़ आईडी: 1660600) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali