புவி அறிவியல் அமைச்சகம்
வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை 2020 செப்டம்பர் 28இல் ஓய்ந்தது
Posted On:
28 SEP 2020 5:43PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்:
- வடமேற்கு இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் காற்றின் தாழ்வான அடுக்குப் பகுதியில் புயல் எதிர்ப்பு சுழற்சி உருவாகி இருப்பதாலும், ஈரப்பதம் மற்றும் மழைப் பொழிவு கணிசமாகக் குறைந்திருப்பதாலும், மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் பகுதிகளில் இருந்து இன்று, 2020 செப்டம்பர் 28 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை உள்வாங்கியது. வழக்கமாக இது செப்டம்பர் 17 ஆம் நடக்கும் நிகழ்வாக இருந்து வந்தது.
கடந்த 5 ஆண்டுகளில் மேற்கு ராஜஸ்தானில் தென்மேற்குப் பருவமழை உள்வாங்கிய விவரம்:
§ 9 அக்டோபர் 2019
§ 29 செப்டம்பர் 2018
§ 27 செப்டம்பர் 2017
§ 15 செப்டம்பர் 2016
§ 04 செப்டம்பர் 2015
(Release ID: 1659870)