பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்பு தளவாடங்கள் தொழிலின் சர்வதேச பரவல் மற்றும் கூட்டுக்காக கம்போடியா மற்றும் இந்தியா இடையே இணையக் கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 25 SEP 2020 7:04PM by PIB Chennai

கம்போடியா மற்றும் இந்தியா இடையே இணையக் கருத்தரங்கு ஒன்று இன்று நடைபெற்றது. "ஒன்றிணைந்த கூட்டுக்காக இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்களின் சர்வதேச பரவல்: இணையக் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி" என்பதே இதன் மையக்கரு ஆகும்.

இந்திய பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் துறையால் இந்த இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை பெருக்குவதற்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியின் மதிப்பை 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்னும் லட்சியத்தை அடைவதற்கும் நட்பு நாடுகளுடன் நடந்து வரும் இணையக் கருத்தரங்க வரிசையின் கீழ் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட இந்தியா மற்றும் கம்போடியாவின் மூத்த ராணுவ அதிகாரிகள், இரு நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID= 1659122


(வெளியீட்டு அடையாள எண்: 1659171) வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri