அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கு பங்களிப்பதற்கான முக்கிய உந்துதலாக, உயிரி தொழில்நுட்ப துறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஸ்வர்தன் தகவல்

Posted On: 24 SEP 2020 4:45PM by PIB Chennai

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஸ்வர்தன் மக்களவையில் நேற்று எழுப்பு பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது:

உயிரி மருந்து பொருட்களை  சந்தைக்கு கொண்ட வரும் நோக்கத்துடன், தேசிய உயிரி மருந்து திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த 2017-ல் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் நோக்கம் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ கருவிகளை உருவாக்குவது, பரிசோதனை மற்றும் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பது ஆகும். 

தேசிய உயிரிமருந்து திட்டம்,  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உயிரிமருந்து தயாரிப்பு மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கிறது, தொழில்துறை கல்விசார் இணைப்புகளை மேம்படுத்துகிறது மற்றும்  மருத்துவ அறிவை தடுப்பூசிகள், உயிரிசிகிச்சைகள், சாதனங்கள் மற்றும் நோயறிதலுக்கான  பரிசோதனைகள் / தொழில்நுட்பங்களாக மாற்றும் வாய்ப்புகளை வழங்குகிறது.

கொவிட்-19 தொற்று நேரத்தில், மருத்துவ சாதனங்கள், பரிசோதனைகள், தடுப்பூசிகள், சிகிச்சைகள் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது நோக்கி மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருந்தது.

இதற்காக தொழிற்சாலைகள்  மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆதரவை வளர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பிபிஇ உடைகள், முககவசங்கள், கிருமிநாசினிகள் தயாரிப்பில்  பல்வேறு அமைச்சகம் மற்றும் துறைகளின் தொழில்நுட்ப தலையீடுகள் பெரிதும் உதவின. கொவிட்-19 தொற்றிலிருந்து மக்களை காக்க இவைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டது. 

உயிரி தொழில்நுட்பத்தில், கல்வித்துறை மற்றும் தொழிற்துறை கூட்டு செயல்பாடை ஊக்குவிப்பதற்காக, புதிய தொழில் தொடக்க சூழலை ஏற்படுத்துவதற்காகவும் உயிரிதொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலை  (BIRAC) மத்திய அரசு கடந்த 2012ம் ஆண்டு ஏற்படுத்தியது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலமாக உயிரி தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் உயிரி தொழில்நுட்ப துறை((DBT) கவனம் செலுத்துகிறது. இத்துறையின் கீழ் 16 தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்குள்  இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கு பங்களிப்பதற்கான முக்கிய உந்துதலாக, உயிரி தொழில்நுட்ப துறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



(Release ID: 1658779) Visitor Counter : 136


Read this release in: English , Bengali , Punjabi