இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது: விராட் கோலி

Posted On: 23 SEP 2020 4:44PM by PIB Chennai

ஃபிட் இந்தியா இயக்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு 2020 செப்டம்பர் 24 அன்று நண்பகல் 12 மணிக்கு நடத்தப்படும் ஃபிட் இந்தியா உரையாடல் என்னும் பிரத்தியேக நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் உள்ள உடல் நல ஊக்கம் அளிப்பவர்கள் மற்றும்  ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாட இருக்கிறார்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் திரு கிரன் ரிஜிஜுவும் இதில் பங்கேற்கிறார்.

இந்த இணைய உரையாடலின் போது, உடல்நலம் மற்றும் நல்ல ஆரோக்கியம் குறித்த பிரதமரின் சிந்தனைகளுக்கு செவிமடுப்பதோடு, உடலை உறுதிப்படுத்துவதில் தங்களின் சொந்த அனுபவங்களையும் பங்கேற்பாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள். விராட் கோலி, மிலிந்த் சோமன், ருஜூதா திவேகர் மற்றும் இதர உடல்நல ஊக்கம் அளிப்பவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்திய இளைஞர்களின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவராக கருதப்படும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பது பெருமையாக உள்ளது என்று கூறியுள்ளார்.

"மாண்புமிகு பிரதமரின் ஃபிட் இந்தியா உரையாடலில் பங்கேற்பதை கௌரவமாக கருதுகிறேன். உடலினை உறுதி செய்வது பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் நான் பகிர்ந்து கொள்ளப் போவதை நீங்கள் காணலாம்," என்று கோலி கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658204



(Release ID: 1658372) Visitor Counter : 109