மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உயர்கல்வியின் சர்வதேச மையம் குறித்து தேசிய இணைய வழி கருத்தரங்கம்
Posted On:
23 SEP 2020 4:34PM by PIB Chennai
உயர் கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு ஆகியவற்றால் உயர்கல்வியின் சர்வதேச மையம் குறித்து தேசிய இணைய வழி கருத்தரங்கம் ஒன்று இன்று நடத்தப்பட்டது.
கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் விதமாக தேசிய கல்வி கொள்கை 2020-ஐ மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
2020 செப்டம்பர் 8 முதல், சிக்ஷா பர்வின் கீழ் இணைய கருத்தரங்குகளை கல்வி அமைச்சகம் நடத்தி வருகிறது.
இன்று நடைபெற்ற கருத்தரங்கில், இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தின் தலைவர் (ஆராய்ச்சி) பேராசிரியர் ராகேஷ் மோகன் ஜோஷி, நிதி ஆயோக் இயக்குநர் திரு அலோக் மிஸ்ரா, தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஐ கே பட், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் வைத்திய சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் சர்வதேச கூட்டுறவு இணை இயக்குநர் டாக்டர் மஞ்சு சிங் இணைய கருத்தரங்கை நெறியாண்டார். இதில் பேசியவர்கள் தேசிய கல்விக் கொள்கையை சிறப்பாக செயல்படுத்துவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த செய்தி குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1658200
(Release ID: 1658371)
Visitor Counter : 135